sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

/

 எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

 எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

 எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

6


ADDED : ஜன 19, 2026 04:19 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:19 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில், 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை, சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம் செல்வது தற்போது கட்டாயமாக உள்ளது. இதற்கான நடைமுறையில் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

சோதனை வெற்றி

இந்நிலையில், பதிவுத்துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள, 'ஸ்டார் 2.0' மென்பொருளுக்கு பதிலாக, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என, தமிழக அரசு 2021ல் அறிவித்தது.

இதற்கான புதிய மென்பொருள், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சோதனைகள் வெற்றி அடைந்துள்ளன. இதையடுத்து, பதிவுத்துறை இணையதளத்தில், 'ஸ்டார் 3.0' மென்பொருளை சேர்க்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சொத்து வாங்கும் மக்கள், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும், பத்திரப்பதிவை மேற்கொள்ளும் வகையில் 18 புதிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் கையெழுத்திட்டு, சொத்து பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு கிடைக்கும்.

காகிதமில்லா அலுவலகம் என்பதுடன், கட்டணங்களை க்யு.ஆர்., குறியீடு முறையில் செலுத்தும் வசதிகளும், இதில் இடம் பெற்றுள்ளன. இதனால், பத்திரப்பதிவு பணிகள் மிகவும் எளிதானதாகிவிடும்.

தொழில்நுட்பம்


சென்னை, கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில், கடந்த வாரம் இந்த மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய மென்பொருள் தொழில்நுட்ப ரீதியாக அமலுக்கு வந்தாலும், முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் இதற்கான துவக்க விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர், அமைச்சர் ஆகியோரின் நேரம் கிடைத்ததும், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கான துவக்க விழா நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய வசதிகள் என்னென்ன?


* சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு, பத்திரங்களை காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டாம்
* துவக்கத்தில், 10 வகையான பத்திரப்பதிவு பணிகள், முழுமையாக 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளப்படும்
* புதிய திட்டங்களில் வீடு, மனை வாங்குவோர், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பில்டர், மேம்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவை முடிக்கலாம்
* வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில், மக்கள் விரும்பும் நேரத்தில், 'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவை மேற்கொள்ளலாம்
* சார் - பதிவாளர் அலுவலகங்கள் பிரிக்கப்பட்ட நாட்களை கருத்தில் வைத்து, வெவ்வேறு அலுவலகங்களை அணுகாமல், சொத்தின் வில்லங்க சான்றிதழ்களை ஒரே இடத்தில், 'ஆன்லைனில்' பெறலாம்
* சான்றிடப்பட்ட பத்திரப் பிரதியை, மூன்று நாட்களுக்குள் வழங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது
* சொத்து வாங்கும் மக்கள், அதற்கான வரைவு பத்திரங்களை தாமாக, 'ஆன்லைன்' முறையில் நான்கு கட்டங்களில் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
* பத்திரப்பதிவில் இறுதி நிலையில் செலுத்தப்படும் கட்டணங்களை, க்யு.ஆர்., குறியீடு முறையில் செலுத்தலாம்.








      Dinamalar
      Follow us