போலியாக இந்தியா-பாக்., போர் வீடியோ: ஏ.டி.ஜி.பி., எச்சரிக்கை
போலியாக இந்தியா-பாக்., போர் வீடியோ: ஏ.டி.ஜி.பி., எச்சரிக்கை
ADDED : மே 11, 2025 05:08 AM

சென்னை: 'இந்தியா - பாகிஸ்தான் போரை மையப்படுத்தி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவதுபோல சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக சைபர்தாக்குதலும் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என மாநில சைபர் குற்றப்பிரிவுதலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சைபர் குற்றவாளிகள் இந்தியா - பாகிஸ்தான் போர் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் போன்றவற்றை தீங்கிழைக்கும் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில்பரப்புகின்றனர்.
இவற்றில் உளவு மென்பொருள் மற்றும்சந்தேகத்திற்குரிய இணையதளங்களின் இணைப்புகள் இடம் பெற்றுள்ளன. மொபைல்செயலி வழியாக பணம், தகவல் திருட்டுக்களும் நடக்கின்றன.
'டான்ஸ் ஆப் தி ஹிலாரி, ஆர்மி ஜாப் அப்ளிகேஷன், பார்ம் பி.டி.எப்.,' உட்பட பல்வேறு தலைப்புகளில் வீடியோ, படங்கள் மற்றும் கோப்புகளை அனுப்பி தகவல் திருட்டு நடக்கிறது.
அரசு இணையதளங்கள் போல வடிவமைத்து தகவல்களை திருடவும் முயற்சி நடக்கிறது.சந்தேகத்திற்குரிய கோப்புகளை பதிவிறக்கம்செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் கணினி மற்றும் மொபைல் போன் விபரங்கள் குற்றவாளிகள் வசம் சென்று விடும்.
அதை பயன்படுத்தி வங்கி கணக்கு, வாட்ஸ் ஆப்மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபடுவர்.
நீங்கள் நம்பும் நபர்களிடம் இருந்து இதுபோன்ற வீடியோ மற்றும் படங்கள் அடங்கிய கோப்புகள் வந்தாலும் ஒரு போதும் திறக்க வேண்டாம்.
அவற்றை யாரிடமும் எந்த குழுவிற்கும் ஒரு போதும் அனுப்ப வேண்டாம். முக்கியமான காட்சிகளை காண்பிப்பதாககூறி வரும் இணைப்புகளை 'கிளிக்' செய்ய வேண்டாம்.
போலியான தகவல்கள் மற்றும் சந்தேக தகவல்களை பகிரும் 'வாட்ஸ் ஆப்' குழுவில் இருந்துஉடனடியாக விலகுவதுடன் 1930 என்ற எண்ணில் புகார் பதிவு செய்ய வேண்டும். உங்கள் 'வாட்ஸ் ஆப்' ஹேக் செய்யப்படுவதை தவிர்க்க செட்டிங்சில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துங்கள்.
யாருடனும் 'ஓடிபி' எண்களை பகிர வேண்டாம். தெரியாத இ-மெயில் முகவரி வாயிலாக பெறப்படும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வது, இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.