உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 27, 2026 09:11 PM
ADDED : அக் 27, 2026 09:07 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார்– ஊட்டி இடையே மலைரயில் பாதையில் பாறைகள் உருண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், 29ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் குறைந்த நிலையிலும், கேத்தி – லவ்டேல் இடையே பாறைகள் விழுந்தன. இதேபோல், ஹில்குரோவ் அருகே ஏற்பட்ட மண் சரிவும் ஊழியர்களால் அகற்றப்பட்டது. மழை பெய்வது நின்றபோதும் திடீரென பாறைகள் உருண்டு விழுவதால், மலை ரயில் குறித்த காலத்தில் இயக்குவதில் சிரமம் உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
