தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்

மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்

மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்

2


ADDED : அக் 26, 2026 09:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 09:47 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் உறவினர்கள் காத்திருப்பதாக செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து எக்ஸ் தளத்தில் அதிகாரி பேசும் வீடியோவுடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'தவறான தகவல். மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மயானத்தின் உட்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் ஊழியர் சரிசெய்ய தாமதமானது. ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். உட்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் மின்வாரிய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us