தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிலை பாதுகாப்பு மையங்களிலிருந்து விடைபெறும் உற்சவர் சிலைகள்

சிலை பாதுகாப்பு மையங்களிலிருந்து விடைபெறும் உற்சவர் சிலைகள்

சிலை பாதுகாப்பு மையங்களிலிருந்து விடைபெறும் உற்சவர் சிலைகள்


UPDATED : நவ 25, 2026 10:30 PM

ADDED : நவ 25, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 10:30 PM ADDED : நவ 25, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக சிலை பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட உற்சவர் சிலைகள் சம்மந்தப்பட்ட கோவிலிலுள்ள சிலை பாதுகாப்பு அறைகளுக்கே மீண்டும் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழகத்தில் சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள உற்சவர் சிலைகளுக்கு அன்றாட பூஜைகளையும், திருவிளக்கு ஏற்றி, திருவமுது படைத்தல் உள்ளிட்ட நித்யபடி திருவாராதனை கைங்கர்யங்களை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் கோவையிலுள்ள சண்டிகேஸ்வர நாயனார் அறக்கட்டளை நிர்வாகி சுரேஷ்பாபு வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் கோர்ட் அன்றாடம் உற்சவர் சிலைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிட்டது.

சிலை பாதுகாப்பு மையங்களில் இருந்த உற்சவர் சிலைகள் திருவிழாக்கள் மற்றும் உற்சவ காலங்களில் மட்டுமே சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு எடுத்து சென்று வழிபாடு நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் சிலை பாதுகாப்பு மையங்களிலேயே வைக்கப்படுகிறது. இதனால் உற்சவர் சிலைகளுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகள், திருவமுது படைத்தல், திருவிளக்கு ஏற்றுதல் ஆகமவிதிகளின் படி வழிபாடு நடத்துதல் நடைபெறவில்லை.

இது தொடர்பாக ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் டி.ஜி. வினய், அளித்த பதில்: தமிழகத்தில், 25 சிலை பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இதில்,188 கண்காணிப்பு கேமராக்கள், 33 களவு எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையங்களில் உள்ள உற்சவர் சிலைகளுக்கு வழிபாடுகள் நிறுத்தப்படாமல் தொடர்கிறது.

தமிழகத்தில் 1,881 கோவில்களில் உறுதியான பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் 1,782 பணிகள் முடிந்துவிட்டன. 118 பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்து உற்சவர் சிலைகள் அந்தந்த கோவில் பாதுகாப்பு அறைக்கே கொண்டு செல்லப்படும். தற்போது வரை 342 உற்சவர் சிலைகள் அந்தந்த கோயில் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ்பாபு கூறியதாவது:

உற்சவர் விக்ரஹங்களுக்கு அன்றாடம் அபிஷேகங்களும், பூஜைகளும், பக்திக்காக மட்டுமல்லாமல் விக்ரஹங்களின் உலோகத்தன்மையை பாதுகாப்பதற்காகவும் செய்யப்படுகிறது. அதனால் சிலைகளுக்கு அபிஷேகம், வழிபாடு, திருவமுது படைத்தல் ஆகியவற்றின் வாயிலாக உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். அது வழிபாடு செய்யும் பக்தர்களுக்கும் நம்நாட்டின் வளர்ச்சிக்கும் மிகுந்த பயனளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us