உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 17, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, மின்சாரம் பாய்ந்ததில், விவசாயி நடராஜன், 60, உயிரிழந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை, கன்னடிகுப்பம் கிராமத்தில் உள்ள உறவினரை பார்க்க, விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றார்.
அப்போது, மிதமான மழை பெய்த நிலையில், நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தின் ‘ஸ்டே’ கம்பி மீது உரசியவாறு சென்றதால், மின்சார கசிவு ஏற்பட்டு, இவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், கீழே விழுந்தார்.
அங்குள்ள கம்பி வேலியை கையால் பிடித்தபோது, அதிலும் மின்சாரம் பாய்ந்திருந்ததால், நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
