உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 09, 2026 08:55 PM
ADDED : அக் 09, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்பெட்டா கிராமத்தில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மூலம், வன உயிரினங்களை மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாகவும், குற்றச்செயல்களுக்கு அவற்றை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், தளி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்படி, அந்த கிராமத்திற்கு ரோந்து சென்ற போலீசார், அப்பகுதியை சேர்ந்த விவசாயி முனிராஜ், 68, என்பவர், தன் வீட்டின் அருகே விவசாய நிலத்தில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வன உயிரினங்களை முனிராஜ் வேட்டையாடி வந்தது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.
