உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 23, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: கல்லணை கால்வாயில் போதிய தண்ணீர் வராததாலும், பருவமழை ஏமாற்றியதாலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாவில், நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், இன்று (நவ.,23), பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக, ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு முழுமையாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
