விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் தரணும்
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் தரணும்
ADDED : டிச 08, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உற்பத்தியாகும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை அரசு நேரடியாக கொள்முதல் செய்து, பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரைக்கு பதிலாக வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில், மழை, புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து, ஒரு விவசாயி கூட விடுபடாமல், ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆயிரம் நாட்களுக்கு மேல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகளுக்கு, கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் வறண்டு போகாமல் இருக்க, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் அறிவித்த பின், கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
- வாசன் தலைவர், த.மா.கா.,

