ADDED : ஜன 03, 2024 10:59 PM
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியே நடக்கும் வணிகத்திற்கு, சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது. தமிழகத்தின் பல பகுதிகளில், இரவில் லாரிகளை நிறுத்தி சிலர், அதிகாரி என்ற போர்வையில், கையூட்டு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும், 100 கோடி ரூபாய் வருமானம் உள்ள, வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நிகழும் அவலங்களை நீக்கி, முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
சில விவசாயிகள், அதிக மகசூலுக்காக, உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால், இயற்கையாகவே விவசாய விளைபொருட்களில், அதிக நச்சுத்தன்மை ஏற்படுகிறது.
இதனால், அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில், வேதி பொருட்கள் அதிகம் இருப்பதால், அதை வாங்கி, விற்கும் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற, வேளாண் துறை அதிகாரிகள் வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும்.
- எஸ்.பி.ஜெய்பிரகாசம்,
கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்.