உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 18, 2026 04:39 AM

அ நிறம் | அளவு
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தினக்கூலி பணியாளர்கள், நேற்று பட்டினி போராட்டம் நடத்தினர்.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில், தினக்கூலி அடிப் படையில், 1,458 பேர் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள், தங்களுக்கு காலமுறை ஊதியத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, சட்ட சபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இல்லையென்றால், அறிவிப்பு வரும் வரை, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர். நேற்று மாலை அவர்களை போலீசார் கைது செய்தனர்.
