தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மகனை கொன்ற தந்தை 3வது மனைவியுடன் கைது

மகனை கொன்ற தந்தை 3வது மனைவியுடன் கைது

மகனை கொன்ற தந்தை 3வது மனைவியுடன் கைது


UPDATED : நவ 13, 2026 10:32 PM

ADDED : நவ 13, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 10:32 PM ADDED : நவ 13, 2026 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போளூர்: போளூர் அருகே, மகனை கொலை செய்த நடராஜன், 60, மற்றும் அவரது, 3வது மனைவி வேண்டா, 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அல்லியாலமங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது முதல் மனைவி சாவித்திரி. குழந்தை இல்லை. கமலா என்பவரை, இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு சேகர், 37, பாபு, 35, என இரு மகன்கள்.

கமலா இறந்ததால், வேண்டா என்பவரை, மூன்றாவதாக நடராஜன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஜேஸ்வரி, 25, தினேஷ்குமார், 24, என்ற மகள், மகன் உள்ளனர். இதில், பாபுவை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இதனால், திருமணம் செய்து வைக்குமாறு நடராஜனிடம் பாபு கேட்டார். மேலும், சொத்தில் பங்கு பிரித்து கொடுக்கும்படி கேட்டார். கடந்த, 4ம் தேதி இரவு முதல், பாபுவை அவரது அத்தை செல்வி, 56, தொடர்பு கொள்ள முடியாததால், போளூர் போலீசில் புகார் செய்தார்.

விசாரணையில் நடராஜன், வேண்டா இருவரிடமும் நவ., 4ம் தேதி இரவு பாபு தகராறில் செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த நடராஜன், வேண்டா இருவரும் சேர்ந்து, கத்தியால் பாபுவை குத்தி கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது.

வழக்கு பதிந்த போளூர் போலீசார், நடராஜன், வேண்டாவை கைது செய்தனர். நேற்று, பாபு சடலத்தை தோண்டி எடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us