ADDED : ஜூன் 18, 2025 03:26 AM

பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மை, பெரும்பான்மை மக்களை மோதவிட்டு வெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையை தமிழகத்துக்குள்ளும் எடுத்துவர முயற்சிக்கிறது பா.ஜ., அதற்கு இங்கிருப்போர், ஒருநாளும் இடம் கொடுத்துவிடக் கூடாது.
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு, அதில் முழு நம்பிக்கை உடையவர்கள் தமிழக மக்கள். அதனால் தான், பா.ஜ.,வை இங்கு வேரூன்ற விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
தமிழக அரசுக்கு தர வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு தராமல் இருப்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கே விரோதமானது.
பா.ம.க.,வில் நடப்பது உட்கட்சி பிரச்னைதான் என்றாலும், அப்பா-மகன் மோதல் காமெடியாக உள்ளது. மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், காதல் பிரச்னையில் கடத்தலுக்கு துணை போவது, அதிர்ச்சி அளிக்கிறது.
சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,