15 சங்கங்களின் கூட்டமைப்பு அமைச்சர் சிவசங்கரிடம் மனு
15 சங்கங்களின் கூட்டமைப்பு அமைச்சர் சிவசங்கரிடம் மனு
ADDED : அக் 26, 2024 07:10 AM
சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி, 15 சங்கங்களை சேர்ந்த கூட்டமைப்பு நிர்வாகிகள், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளித்தனர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்படாமல் இருந்தது.
தொழிற்சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின், 15வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சு, ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. அடுத்த கட்ட பேச்சு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஐ.என்.டி.யு.சி., பாரத் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் உட்பட 15 தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகள், தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேற்று சந்தித்து பேசினர்.
ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும் என்றும், 15வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.