ADDED : டிச 15, 2024 10:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல் : செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தைச் சேர்ந்தவர் அலமேலு, 30. வியாசர்பாடியை சேர்ந்தவர் பார்வதி, 36. இருவரும் கஞ்சா விற்ற வழக்கில், கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நவ., 9ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரையும், நேற்று முன்தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை, புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் புழல் சிறைக்கு சென்றுள்ளார். சிறையில் இருந்த அலமேலு, பார்வதி ஆகியோர், சரவணனை அவதுாறாக பேசி மிரட்டியுள்ளனர். புழல் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.