தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உரங்கள் விலை அதிகரிப்பு; விவசாயிகள் அதிர்ச்சி

 உரங்கள் விலை அதிகரிப்பு; விவசாயிகள் அதிர்ச்சி

 உரங்கள் விலை அதிகரிப்பு; விவசாயிகள் அதிர்ச்சி


ADDED : ஜூன் 30, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உரங்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்து, சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு இருந்தாலும், அரசின் மானிய நிதியை பெற, ஏராளமான விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், உரங்களின் தேவை அதிகரித்து உள்ளது. அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக, உரங்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு தேவையான உரங்களை குறைத்து, மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. யூரியா, பாஸ்பேட், டி.ஏ.பி., உரங்கள் கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடைகளில் கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:

கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் கையிருப்பு குறைவாக உள்ளதால், யூரியா, பாஸ்பேட், டி.ஏ.பி., உரம் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.

மொத்தம், 45 கிலோ எடை யூரியா மூட்டை, 265 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இறக்குமதி குறைவால், 1,500 ரூபாய் விற்கப்பட்ட பாஸ்பேட் உரங்கள், 2,300 ரூபாய் வரையும், டி.ஏ.பி., உரம், 1,400 ரூபாயில் இருந்து, 1,800 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. உரங்கள் விலை கூடியதால், சாகுபடி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us