தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பண்டிகைகள் நிறைவு: பருப்பு விலை குறைந்தது

பண்டிகைகள் நிறைவு: பருப்பு விலை குறைந்தது

பண்டிகைகள் நிறைவு: பருப்பு விலை குறைந்தது


ADDED : ஜன 03, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பெரும்பாலான பண்டிகைகள் முடிந்துள்ளதால், பருப்பு வகைகளின் விலை குறைந்து வருகிறது.

மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், பருப்பு வகைகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டாலும், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை.

பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாட்டில், கடந்த ஆண்டு அக்., மாதத்திற்கு பின் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது.

பண்டிகை காலம் துவங்கியதால், பருப்பு வகைகளை, 'ஆன்லைன்' மொத்த வியாபாரிகள் பதுக்கியதே இதற்கு காரணம். இதனால், விலை கிலோவிற்கு, 10 - 20 ரூபாய் வரை உயர்ந்தது.

Image 1214989
பெரும்பாலான பண்டிகைகள் முடிந்த நிலையில், பருப்பு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதனால், அவற்றின் விலை கிலோ 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்ததும், பருப்பு வகைகள் விலை மேலும் குறையும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us