ADDED : மே 20, 2025 06:48 AM

சென்னை:
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
ஈரோடு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு இருந்த, 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன.
வெயிலில் சளைக்காமல் பாடுபடும் விவசாயிகளின் மொத்த உழைப்பையும், இப்படி அலட்சியப்படுத்தி வீணாக்குவது தான் திராவிட மாடலா?
ஒரு மழைக்கே பழுதடைந்து உணவு பொருட்கள் பாழாகும் லட்சணத்தில் இயங்கும் சேமிப்பு கிடங்குகளை வைத்து கொண்டு, இந்தாண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, 50 சதவீதம் குறைத்தது ஏன்?
ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழகத்தின் முதுகெலும்பை நொறுக்கும் நோக்கமா?
தமிழகத்தின் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. சிறு மழை பெய்தாலும், வயலில் நெற்பயிர்கள் மூழ்கி நாசமடைக்கின்றன.
இதேநிலை தொடருமானால், தானிய பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உண்டாகி விடும்.
எனவே, தி.மு.க., அரசின் நிர்வாக குளறுபடிகளால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், சேமிப்பு கிடங்குகளை, அரசு உடனே சீர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.