ADDED : ஜன 19, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 55 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டன.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் கூறியதாவது:
ஈரோடு கிழக்கில் தாக்கலான வேட்பு மனுக்கள், நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. அதில், 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் 'மைக்' சின்னம் ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்துக்கு, இதுபற்றி கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.