தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த நிதித்துறை அறிவுறுத்தல்

 நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த நிதித்துறை அறிவுறுத்தல்

 நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த நிதித்துறை அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 03, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தங்கள் துறையில் நிலவும் நிதி நிலைமைக்கு ஏற்ப, புதிய திட்டங்களை பரிந்துரைக்க வேண்டும். வட்டி செலவை குறைக்க, வங்கிகளிடம் வலியுறுத்த வேண்டும்' என, பொதுத்துறை நிறுவனங்களையும், பல துறைகளையும், நிதித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்கட்டமைப்பு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை மேற்கொள்ள, வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குகின்றன.

மாநில அரசின் கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இது தவிர, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் உள்ளன. இந்த கடன்களுக்காக மட்டும் கடந்த ஆண்டில், 70,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு உள்ளது.

தற்போது, நிதி நெருக்கடியை குறைக்கும் நடவடிக்கையில், அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, வட்டி செலவை குறைக்க, வங்கிகளிடம் பேசுமாறு, பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளை, அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

அரசு வருவாயில், பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கு தான் அதிகம் செலவு செய்யப்படுகிறது. அதில், வட்டி செலவின் பங்கு மட்டும், 22.80 சதவீதம். மற்ற செலவுகளை குறைக்க முடியாது. வட்டி செலவை குறைத்தால் நிதி சேமிப்பு கிடைக்கும்.

ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் கடன் வங்கிய வங்கிகளில், 10 சதவீதம் மேல் வட்டி செலுத்தக்கூடிய கடன்களுக்கு, 2 சதவீதம் வரை வட்டியை குறைக்க வலியுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு துறையும் நிதி நிலைமைக்கு ஏற்ப, செயல்படுத்தக்கூடிய திட்டங்களை பரிந்துரைக்க வேண்டும். அவசியமின்றி திட்டங்களை பரிந்துரைக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us