ADDED : ஆக 04, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : போலீஸ் விசாரணையின் போது, அடித்துக் கொல்லப்பட்ட, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில் நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது.
கோவில் காவலாளி அஜித்குமார், தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிச்சாமி கடந்த 30ம் தேதி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அ.தி.மு.க., சார்பாக நிதி உதவி வழங்குவதாக தெரிவித்தார்.
அதன்படி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அஜித்குமாரின் தாய் மாலதியிடம், அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதன் வழங்கி னார்.