நிதிநிலை அறிக்கை; முத்திரை சின்னம் வெளியிட்டது தமிழக அரசு
நிதிநிலை அறிக்கை; முத்திரை சின்னம் வெளியிட்டது தமிழக அரசு
ADDED : பிப் 18, 2024 04:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை (பிப்.19) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” எனும் வாசகத்துடன் நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக முதல்முறையாக சட்டசபையில் நாளை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கேற்ப முத்திரை சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. முத்திரை சின்னம் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்து சின்னம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலமாக தமிழக அரசு திகழ்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.