தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/போதை பொருள் வழக்கில் பைனான்சியர் சிக்கினார்

போதை பொருள் வழக்கில் பைனான்சியர் சிக்கினார்

போதை பொருள் வழக்கில் பைனான்சியர் சிக்கினார்


UPDATED : அக் 25, 2026 11:01 PM

ADDED : அக் 25, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 11:01 PM ADDED : அக் 25, 2026 10:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம்: நாகையில், 'மெத்ஆம்பெட்டமைன்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பைனான்சியர் ராஜ்குமார், 38, கைது செய்யப்பட்டார்.

நாகை அருகே பிரதாபராமபுரத்தில், 137 கிலோ மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க., முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், சுகநாதன் கூட்டாளி ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் அக்., 23ல், திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அளித்தனர். ராஜ்குமார், வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்துவதோடு, பைனான்சியராகவும் இருந்துள்ளார்.

அக்., 23ல் ஆஜரான ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us