ADDED : டிச 20, 2025 11:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது.
சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் ஒரு சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

