ADDED : மார் 24, 2025 06:09 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஒரு ஆயில் மில் மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் சாகுல், 40, என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது. இந்த ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார்.
இதில், இன்று அதிகாலை ஒரு மணி அளவில் எதிர்பார விதமாக தீ பற்றி உள்ளது. ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் தீப்பற்றி உள்ளது.இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடி தீயணைத்தனர். மேலும் இது ஆயில் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டு தீயை ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் ஆலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.