ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; சிகிச்சை பெற முடியாமல் 3பேர் பலி
UPDATED : ஜன 02, 2025 12:40 PM
ADDED : ஜன 02, 2025 12:36 AM

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. புகை பரவியதால் நோயாளிகள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டடனர். அந்த நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 3பேர் பலி
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு(ஜன.,01) விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இங்கு தீ விபத்த காரணமாக சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வாகன விபத்தில் சிக்கிய சகுபர் சாதிக் 47, வரிசைகனி 65, அனீஸ் பாத்திமா 40, ஆகியோர் பலியாகினர். இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


