திருப்பூர் பட்டாசு கடையில் தீ விபத்து; பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
திருப்பூர் பட்டாசு கடையில் தீ விபத்து; பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
ADDED : ஜூலை 26, 2025 08:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் பட்டா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசுகள் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், அருகில் இருந்த பேன்சி கடையிலும் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

