சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்! முதல் புறநகர் ஏ.சி. ரயில் பயணத்துக்கு ரெடி
சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்! முதல் புறநகர் ஏ.சி. ரயில் பயணத்துக்கு ரெடி
ADDED : ஜன 18, 2025 07:55 AM

சென்னை; சென்னையில் முதல் குளிரூட்டப்பட்ட புறநகர் மின்சார ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன.
வர்த்தக நகரான மும்பையில் புறநகர் பகுதிகளுக்குச் செல்ல மின்சார ரயில்களில் குளிருட்டப்பபட்ட வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படுகின்றன.
மும்பை போன்று சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் குளிரூட்டப்பட்ட புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு ரயிலை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அதன் முழு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
தற்போது, ரயில்வே அதிகாரிகள் அந்த ரயிலை சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை ஓட்டம் முடிந்த பின்னர், எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை ரயில்வே வாரியம் முடிவு செய்து அறிவிக்கும். அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் ரயில் இயங்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.