தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,

2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,

2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி: வெளியிட்டார் இ.பி.எஸ்.,


ADDED : ஜூன் 26, 2025 07:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 07:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''தி.மு.க.,வால் பறிபோன தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் மீட்டுத் தருவேன். இதுவே சட்டசபை தேர்தலுக்கான முதல் வாக்குறுதி,'' என அ.தி.மு.க.., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுக.,வைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்துவிட்டது' என்கிறார்.

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாதுரையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்சன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழகத்தை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழக மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!

திமுக-வால் பறிபோன தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!இதுவே, தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!


இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us