UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:57 PM
ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு, 2.45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகம் பூங்குளம் காப்புக்காட்டில், மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரேஞ்சர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் பூங்குளம் காப்புக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். பூங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 34, சக்திவேல், 42, ரகு, 25, வடிவேல், 51, மற்றும் தனஞ்செயன், 24, என்பது தெரிந்தது. மான் வேட்டையாடி இறைச்சியை ஒரு பையில் வைத்திருந்தனர். கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிந்து, 2.45 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.
