/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் விஷம் குடிப்பு; சிறுவன் பலி
/
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் விஷம் குடிப்பு; சிறுவன் பலி
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் விஷம் குடிப்பு; சிறுவன் பலி
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் விஷம் குடிப்பு; சிறுவன் பலி
ADDED : டிச 23, 2025 04:32 AM
ஓசூர்: பீஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், கத்ராவை சேர்ந்தவர் ரிஸ்வான் அன்சாரி, 38. இவரது மனைவி சல்மா காத்துான், 35. இவர்கள் மகள் முஸ்ராத், 17, மகன்கள் சாயல், 14, அயான், 10; அனைவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.முதுகானப்பள்ளியிலுள்ள, கர்நாடகாவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தனர்.
நேற்று காலை, ரிஸ்வான் அன்சாரி, அவர் மனைவி சல்மா காத்துான், மகள் முஸ்ராத், மகன்கள் சாயல், அயான் ஆகியோர் அவர்கள் தங்கியுள்ள அறையில் மயங்கி கிடந்தனர். அயான் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மற்ற நான்கு பேரையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிசோதனையில், 5 பேரும் பூச்சி மருந்து குடித்தது தெரிந்தது. குடும்ப பிரச்னை ஏதும் இல்லை என, உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அயானுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்றும், பேய் பிடித்திருப்பதாகவும் பெற்றோர் நினைத்திருந்தனர். இந்நிலையில், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, பெற்றோரும் விஷம் சாப்பிட்டது தெரிந்தது.
இதில், ரிஸ்வான் அன்சாரி, சல்மா காத்துான், மகள் முஸ்ராத் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

