தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு ஐந்து புதிய மண்டலங்கள்

 புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு ஐந்து புதிய மண்டலங்கள்

 புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு ஐந்து புதிய மண்டலங்கள்


ADDED : ஜூன் 20, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களில், விரைவான சேவை வழங்குவதை உறுதி செய்ய, சென்னை உட்பட ஐந்து புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களின் செயல்பாட்டை விரைவுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த, உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பை கைவிட்டு, மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுதும், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாக வைத்து, ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மறுசீரமைப்பு வாயிலாக, நிர்வாக பணிகள் மேலும் வேகப்படுத்தப்படும். புதிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், தொழில்நுட்ப ஆய்வு, திட்ட கண்காணிப்பு, முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்ற பணிகள், அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us