தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லஞ்ச விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை பயிற்சி மைய விமான இயக்கம் நிறுத்தம்

லஞ்ச விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை பயிற்சி மைய விமான இயக்கம் நிறுத்தம்

லஞ்ச விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை பயிற்சி மைய விமான இயக்கம் நிறுத்தம்


UPDATED : அக் 07, 2026 08:29 PM

ADDED : அக் 07, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:29 PM ADDED : அக் 07, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் சச்சின் கேசவ் பானே, 40. சேலம் விமான நிலையத்தில், ‘எக்வி ஏர்’ விமானி பயிற்சி மையம் நடத்துகிறார். ஏழு பயிற்சி ரக விமானங்கள், 50க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயிற்சி பெறுகின்றனர்.

அங்கு செப்., 31ல், சென்னை, மீனம்பாக்கம், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்ககத்தின், தகுதி நிலை பிரிவின் துணை இயக்குனர் சுசில்குமார் கார்க் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, விதிகளை பின்பற்றாமல் குறைபாடு இருப்பதை கண்டறிந்தார். அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க, 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். சச்சின் கேசவ் பானே கொடுக்க, சுசில்குமார் கார்க் பெற்றபோது, சி.பி.ஐ., அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, டில்லி அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், ஓமலுார், ஏற்காடு, சேலம் நகர் பகுதிகளில் தினமும் சுற்றி வந்த பயிற்சி விமானங்கள், 5 நாட்களாக இயக்கப்படவில்லை.

இதுகுறித்து விமான நிலைய போலீசாரிடம் கேட்டபோது, ‘விமானி பயிற்சி மையத்தில் லஞ்சம் வழங்கிய வழக்கு விசாரணை, அவ்வப்போது நடக்கிறது. அதேநேரம், விமானங்கள் பறக்க தகுதிச்சான்று உள்ளிட்ட குறைபாடுகள் நீக்கப்பட்ட பின், பயிற்சி விமானங்கள் இயங்கும். தற்போது பயிற்சி விமானிகளுக்கு வகுப்பறை பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us