உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 18, 2026 05:59 PM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில், 2,253 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பெய்யும் கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 434 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம், 1,679 கன அடியாக அதிகரித்தது.
அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 49.90 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 2,253 கன அடி, பாசன கால்வாய்களில், 162 கன அடி நீரும் திறந்து விடப்பட்டன.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் என ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
