ADDED : டிச 24, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை: சபரிமலை மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் அன்னதான மண்டபத்தில் நேற்றுவரை 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.
அன்னதான நன்கொடையாக 2.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பந்தளம், எருமேலி, நிலக்கல் கோயில்களில் இந்தாண்டு முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேரடியாக அரவணை அப்பம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த வகையில் தேவசம்போர்டுக்கு 2.32கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.