14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
ADDED : ஜன 04, 2024 08:13 PM

சென்னை: 14-வது முறையாக செந்தில்பாலாஜிக்கு வரும் 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி.செந்தில் பாலாஜியின் தற்போதைய நீதிமன்ற காவல் இன்று (04-ம் தேதி) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 11ம் தேி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனையடுத்து 14 -வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஜாமின் கோரி செந்தில்பாலாஜி உயர்நீதி மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான் அப்பாவி, இதய நோயாளி என ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 8-ம் தேதி க்கு தள்ளி வைத்தார்.