‛‛வலுத்திருக்கு, பழுக்கவில்லை'': ஸ்டாலின் போட்ட புதிர்: எதற்கு சொன்னார் தெரியுமா?
‛‛வலுத்திருக்கு, பழுக்கவில்லை'': ஸ்டாலின் போட்ட புதிர்: எதற்கு சொன்னார் தெரியுமா?
ADDED : ஆக 05, 2024 12:21 PM

சென்னை: உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை தி.மு.க., உறுதிபடுத்தவில்லை.
ஜூலை 20 ல் தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் இது குறித்து உதயநிதி பேசும்போது, துணை முதல்வர் பதவி குறித்து பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்றார்.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினிடம், ‛‛உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறதே ''என நிருபர்கள் எழுப்பினர்.
ஸ்டாலின் அளித்த பதில்: வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை எனக்கூறினார்.மேலும், சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.