உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 18, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி காமராஜா, தமிழக பா.ஜ.,வில் இணைந்தார்.
பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி காமராஜா, தனது ஆதரவாளர்கள் 500 பேருடன், தமிழக பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். அவர்களுக்கு, நயினார் நாகேந்திரன், பா.ஜ., துண்டு வழங்கி வரவேற்றார்.
'தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி, தன்னலமற்று மக்கள் சேவையில் ஈடுபடும் தாமரைப் படையில் இணைந்துள்ள புதிய சொந்தங்களை, மக்கள் பணிக்கு மனமார வரவேற்கிறேன்' என, அவர் தெரிவித்துள்ளார்.
