sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்

/

கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்

கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்

கண்ணீர் சிந்திய அ.தி.மு.க., 'மாஜி'; நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கம்

1


UPDATED : ஜூலை 29, 2025 04:19 AM

ADDED : ஜூலை 29, 2025 12:19 AM

Google News

UPDATED : ஜூலை 29, 2025 04:19 AM ADDED : ஜூலை 29, 2025 12:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் சிந்தியபடி பேசினார்.

தமிழகம் முழுதும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ஆக., 7ல் சிவகாசி வருகிறார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடந்தது.

இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:



மோசடி வழக்கில், தி.மு.க., அரசு என்னை சிறையில் அடைத்தபோது, அ.தி.மு.க.,விற்கு எதிராக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி என்னை மிரட்டினர். தனிமை சிறையில் அடைத்து, மிரட்டி பணிய வைக்க முயற்சித்தனர்; அதற்கும் நான் கட்டுப்படவில்லை.

நான் செத்தாலும் சாவேனே தவிர, அ.தி.மு.க.,வை காட்டிக் கொடுக்க மாட்டேன். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், என்னை வேட்டையாடியது; எதற்கும் நான் அஞ்சவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. சிவகாசி தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவேன்; நிச்சயம் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.






      Dinamalar
      Follow us