ADDED : டிச 04, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.
கோவை மாவட்டம், சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலராகவும் இருந்தவர் சின்னசாமி. கடந்த 2018ல், அண்ணா தொழிற்சங்க பண மோசடி விவகாரம் தொடர்பாக சின்னசாமி கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து, அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை செயலர் பொறுப்பில் இருந்து, அவர் நீக்கப்பட்டார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கு தொடுத்தார்.
அதன்பின், அ.ம.மு.க., வில் இணைந்து, அக்கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலராக பொறுப்பேற்றார்.
அங்கும் தொடர்ந்து நீடிக்காமல், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் சின்னசாமி இணைந்தார்.

