'தை பிறந்தால் வழி பிறக்கும்' முன்னாள் முதல்வர் பன்னீர் நம்பிக்கை
'தை பிறந்தால் வழி பிறக்கும்' முன்னாள் முதல்வர் பன்னீர் நம்பிக்கை
ADDED : ஜன 03, 2026 02:35 AM

அவிநாசி: ''தை பிறந்தால் வழி பிறக்கும்,'' என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஒரு ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணை ப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கேற்றார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை மீண்டும் அக்கூட்டணிக்குள் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையே, பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை நடிகர் விஜயின் த.வெ.க., கூட்டணியில் சேர்க்கவும் பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அவிநாசி வந்த பன்னீர்செல்வத்திடம், 'வரும் சட்டசபை தேர்தலில், நீங்களும், தினகரனும் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது உறுதியா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ''தை பிறந்தால் வழி பிறக்கும். நிச்சயம் தை மாதத்தில், நல்ல பதில் வரும்,'' என்றார்.

