UPDATED : ஜன 25, 2024 10:33 AM
ADDED : ஜன 25, 2024 09:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் பையாக்கவுண்டர் என்ற கிருஷ்ணன் (65) , நேற்று இரவு (ஜன., 24) உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
தூக்கிட்டு தற்கொலை என்றும், மாரடைப்பு என்றும் இரு விதமான தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து கோவில்பாளையம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நன்கொடை வழங்குபவர்
காளப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தார். 2 முறை சுயேச்சையாக ஜெயித்தவர், மாநகராட்சியுடன் இணைந்த பிறகு கவுண்டன்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 ல் மாநகர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். பின்னர் பதவி பறிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தவர்.