UPDATED : ஏப் 16, 2024 10:23 AM
ADDED : ஏப் 15, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் அமைச்சரும், தி.மு.க, இலக்கிய அணியைச் சேர்ந்தவருமான இந்திர குமாரி, 73 உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார்.
வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

