ADDED : பிப் 01, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன், 82. இவர் இந்திய கம்யூ., கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியிலும் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்.
ஆலங்குடி தொகுதியில், 2006 -- 2011ல் இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார்.
நான்கு முறை இந்திய கம்யூ., கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலராக இருந்தார். பின், 2013 முதல் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியில் இணைந்த அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜசேகரன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு அமராவதி என்ற மனைவி மற்றும் ஜீவானந்தம் என்ற மகனும், கல்பனா என்ற மகளும் உள்ளனர்.