ADDED : ஜூலை 14, 2025 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அமர்நாத், 66, உடல்நல குறைவால் காலமானார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான அமர்நாத், அ.தி.மு.க., சார்பில் 1991 சட்டசபை தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க.,வில் நீண்ட காலம் பணிபுரிந்த இவர், மதுரை நகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலராக இருந்தார். உடல்நிலை பாதிப்பால் கட்சி பணியிலிருந்து விலகி இருந்தார். நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.