முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
UPDATED : ஜூலை 21, 2025 11:37 AM
ADDED : ஜூலை 21, 2025 10:00 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜாவை நீக்கி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார். பின்னர் அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, அ.தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.
அ.தி.மு.க., அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமானா அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.,வின் அனைத்து உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார். 2019ல் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து அன்வர் ராஜா பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி வைத்ததால், அன்வர் ராஜா அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ., கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் அன்வர் ராஜா பேட்டி அளித்தார். அவரது பேட்டி அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.,வில் ஐக்கியம்
பின்னர், சென்னையில் உள்ள தி.மு.க., வின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.