sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு

/

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு


UPDATED : செப் 17, 2011 03:42 AM

ADDED : செப் 15, 2011 11:12 PM

Google News

UPDATED : செப் 17, 2011 03:42 AM ADDED : செப் 15, 2011 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி.

எனது வழிகாட்டி திருக்குறள் தான்,'' என அடையாறு அவ்வை இல்லப் பள்ளி மாணவியரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.



சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று மாலை, அடையாறு அவ்வை இல்ல டி.வி.ஆர்., பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து பேசியதாவது:கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் துவக்கிய இந்த பள்ளியை திறமையாக நடத்தி, ஏராளமான மாணவ, மாணவியருக்கு கல்வி அறிவு புகட்டி வரும் இப்பள்ளி நிர்வாகிகளை பாராட்டுகிறேன். மாணவர்கள் நல்ல பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன் வளர வேண்டும். மாணவர்கள் லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கி, உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.இதற்கு ஒரு உதாரணமாக, மரியா கபாச்சியின் கதையைக் கூறுகிறேன். இந்த மரியா கபாச்சி நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, அவனின் தாய் சிறை பிடிக்கப்பட்டார். பின், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அச்சிறுவன் தவித்தான். அவனுடைய ஒன்பதாவது வயதில் ஒரு மருத்துவமனையில் அவனது தாய் சந்தித்தார்.



பின், அவர்கள் அமெரிக்காவில் உள்ள தனது மாமா வீட்டில் தஞ்சமடைந்தனர். மரியா கபாச்சி கல்வியில் சிறந்து விளங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு, ஜீன் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்கான நோபல் பரிசு வென்றார். இது, அவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.காந்தியின் ஒன்பதாவது வயதில் அவரின் தாய் ஒரு போதனை நிகழ்த்தினார். துன்பத்தில் இருக்கும் ஒருவரை மீட்டால், அது உன்னை ஒரு மனிதனாக மாற்றும் என்பது தான் அது. எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் அறிவு தீபமாக விளங்கினார்.



நூறு கோடி மக்கள் தான் இந்தியாவின் சொத்து. எண்ணம் உயர்வாக இருந்தால் பணிகள் உயரும். 2020 திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை, வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளும் அந்த லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனது வழிகாட்டியே திருக்குறள் தான். அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது. எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.



பின், மாணவியரை 10 உறுதிமொழி ஏற்கச் செய்து பள்ளி நூலகத்திற்கு, அவர் எழுதிய புத்தகங்களை பரிசளித்தார். முன்னதாக அவ்வை இல்ல மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அவ்வை இல்ல தாளாளர் சுசீலா வரவேற்றார். அவ்வை இல்ல கல்விக்குழுத் தலைவர் சுகால்சந்த் ஜெயின், சிறப்பு விருந்தினரை கவுரவித்தார்.விழாவில், எழுத்தாளர் சிவசங்கரி, கல்வியாளர் சரஸ்வதி, செயலர் ராஜலட்சுமி, பள்ளி கமிட்டி உறுப்பினர் தேவிகா, பேராசிரியர் காதம்பரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சரோஜா நன்றி கூறினார். இதையடுத்து, மாணவியருடன் கலாம் கலந்துரையாடினார்.








      Dinamalar
      Follow us