கோட்டை முற்றுகை போராட்டம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அறிவிப்பு
கோட்டை முற்றுகை போராட்டம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அறிவிப்பு
ADDED : ஏப் 08, 2025 06:46 AM
சென்னை : தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜாஹிர் ஹூசைன், பொதுச்செயலர் வெற்றிவேல் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில், 2013ம் ஆண்டு, ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், இன்னும் கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை. பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போதும், இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
தி.மு.க., அரசு அமைந்து, நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது, ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். மேக்ஸி கேப் வாகனங்களுக்கு, 'சீட் பர்மிட்' உயர்த்த வேண்டும், ஓலா, ஊபர், போர்ட்டர் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

