தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் மோசடி?

 கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் மோசடி?

 கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் மோசடி?


ADDED : ஜூன் 29, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் பொதுச்செயலர் கோபிநாத், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில், கடந்த ஆட்சியில், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகங்களில், 200 தினக்கூலி பணியாளர்கள் நியமனம், 50 கட்டுமான தொழிலாளர் நலக்கூடங்களை அமைத்தது, கட்டுமானத் தொழிலாளர்கள் 30 லட்சம் பேருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம் ஆகியவற்றில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, 256 கோடி ரூபாய்; முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு, 20 கோடி; திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு, 45 கோடி என, பல்வேறு திட்டங்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us