தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'கூகுள் பே' செயலியில் பரிசு மழையென 'லிங்க்' அனுப்பி மோசடி

 'கூகுள் பே' செயலியில் பரிசு மழையென 'லிங்க்' அனுப்பி மோசடி

 'கூகுள் பே' செயலியில் பரிசு மழையென 'லிங்க்' அனுப்பி மோசடி


ADDED : ஆக 24, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'பணப் பரிவர்த் தனைக்கு உதவும், 'கூகுள் பே' செயலியில், 6,000 ரூபாய் பரிசு மழை காத்திருப்பதாகக் கூறி, 'லிங்க்' அனுப்பி பண மோசடி செய்யும் கும்பலிடம் சிக்க வேண்டாம்' என, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்து உ ள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

பணப் பரிவர்த்தனை செயலியான, 'கூகுள் பே' வாயிலாக, பணம் செலவு செய்யும் போது, 'கேஷ் பேக்' வருகிறது.

சைபர் குற்றவாளிகள், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், 'பேஸ்புக், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'கூகுள் பே' செயலியில், 6,000 ரூபாய் பரிசு மழை காத்திருக்கிறது என, 'லிங்க்' அனுப்பி, பண மோசடி செய்து வருகின்றனர்.

பொதுமக்கள், இதுபோன்ற இணைப்பை தொட வேண்டாம்; ஓ.டி.பி., எண் உள்ளிட்ட விபரங்களையும், எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

இதுபோன்ற, 'லிங்க்' வந்தால், கட்டணமில்லா, 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us